சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கீழடி 10ம் கட்ட அகழாய்வை கடந்த 18ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக 2 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்றுவந்த அகழாய்வில், பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் அறிவித்துள்ளார்.
15க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.