விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி உள்ளிட்ட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதனைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால் தலைமையில் நடைபெற்றது.
இதன் முடிவில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 35 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியாகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.