புதுச்சேரியில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஒப்புக்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமியிடம், கள்ளச்சாராய விற்பனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரியில் உப்பளம், முதலியார்பேட்டை மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தெரிவித்தார். அப்போது மூன்று தொகுதிகளுமே இண்டியா கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி தான் என செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
அதனை ஒப்புக்கொண்ட நாராயணசாமி, தவறு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.