கரூர் அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
வாங்கல் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத், தனது நண்பர்களான கதிர்வேல், பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகியோருடன் இணைந்து காவிரி ஆற்றங்கரையில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குவந்த வடமாநில இளைஞர் ஒருவர், அவர்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் வட மாநில இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக, வினோத் மற்றும் கதிர்வேலை கைது செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.