கரூர் அருகே சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
மண்மங்கலம் நான்கு ரோடு அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில்
சுற்றுலாப் பேருந்து ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி, பேருந்து மீது மோதியதில் நித்யானந்தம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.