நடக்காத பார்முலா கார் ரேஸ்சுக்கு கொடுத்த பணத்தை, தமிழக அரசு வட்டியுடன் சேர்த்து 8 கோடியே 25 லட்ச ரூபாய் திருப்பி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், “பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தமிழக அரசுக்கு 13 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கார் ரேஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், தமிழக அரசு முதற்கட்டமாக 6 கோடியே 42 லட்ச ரூபாய் மாநகராட்சியிடம் திருப்பி வழங்கியது.
ஆனால், மீதமுள்ள 7 கோடியே 27 லட்ச ரூபாய் தர வேண்டியுள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்கான வட்டியுடன் சேர்த்து 8 கோடியை 25 லட்ச ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் , “அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்துவது” என்றும், “சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 பணியாளர்கள் நியமிப்பது” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.