மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் என்பவர் வீட்டுக்கு சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திருமண பத்திரிகை வைக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் ரோஸ்னை கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 51 பவுன் நகை, 15 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.