கடம்பூர் மலைப்பகுதியில் சாலையோர தடுப்புச் சுவர் மீது சிறுத்தை படுத்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கரடி, புலி என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
கடம்பூர் மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியில் சிறுத்தையின் நடமாட்டம் உளளது.. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மல்லியம்மன் கோவில் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று படுத்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனத்தில் இருந்தபடியே சிறுத்தையை செல்போனில் படம்பிடித்தனர்.