மகாராஜா திரைப்படத்தின் கதை தன்னுடையது என பழனியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பழனியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மருதமுத்து என்பவர்,
அத்தியாயம் ஒன்று என்ற பெயரில், தயாரிப்பாளர் சங்கத்தில் தான் முறையாக பதிவு செய்யப்பட்ட கதையை திருடி மகாராஜா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் மருதமுத்து தெரிவித்துள்ளார்.