மயிலாடுதுறை மாவட்டம் சென்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி 7 ஆயிரத்து 777 ரூபாய்க்கு ஏலம் போனது. தேனி, கோவை, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் இதில் கலந்துகொண்டு சுமார் 3 ஆயிரத்து 500 குவிண்டால் பருத்தியை ஏலத்தில் எடுத்தனர்.
இதன்மூலம் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு பருத்தி கொள்முதல் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.