நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.