நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச தகுதியில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கடந்த 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார்.
இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒவ்வொரு இந்தியரும் பெரிதும் மதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எப்படி அடியோடு நசுக்கியது என்பதை, நெருக்கடி நிலை அமலில் இருந்த கருப்பு தினங்கள் நமக்கு நினைவூட்டும் என கூறியுள்ளார்.
நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் குறித்து பேச தகுதியில்லை என்று கூறியுள்ள பிரதமர் மோடி,
கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடப்பது காங்கிரஸ் கட்சிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்திய மனநிலை காங்கிரஸ் கட்சியினரிடையே இன்றும் உயிர்ப்புடன் இருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி,
அதனால் தான் மக்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீண்டும் புறக்கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.