டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர், 7 தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.