விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரிட்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால், ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதாக அசாஞ்சே தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றத்திலிருந்து விடுதலையான ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நாளை ஆஜராகி தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.