டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அப்போது தெலங்கானாவில் சைனிக் பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இதேபோல தெலங்கானாவில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தக் கோரி, ஜெ.பி.நட்டாவை சந்தித்து ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.