விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி நாகமுத்து
Oct 18, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி நாகமுத்து

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். நாகமுத்து தெரிவித்துள்ளார்.

பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த மூன்று குற்றவியல் சட்டப் பிரிவுகள் பற்றி  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பணியை மேற்கொள்ளும், ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பான பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். நாகமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நீதிபதி நாகமுத்து,

ஊடகவியலாளர்களுக்குப் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய சரியான புரிதல்கள் இருக்க வேண்டும் என்று அப்போது  அவர் கூறினார். இந்த சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும் பொழுது பொறுப்புடனும், பொதுநலத்துடனும், கண்ணியத்துடனும் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாலியல் வன்கொடுமையால்   பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை  செய்திகளில் வெளியிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தினார்.

குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

2024 ஜூன் 30-ம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் தான் பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் பதிவு செய்யப்படும்  வழக்குகள் புதிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அவர் கூறினார்.

புதிய குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு தண்டனைகள் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்யும் அம்சம் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க புதிய சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழைய சட்டங்களின் கீழ் ஏற்கனவே உள்ள வழக்குகள் தேங்கி இருப்பதாகவும், அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதற்கு சற்று கால அவகாசம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

தொடக்கத்தில் சில நடைமுறைச் சிரமங்கள் ஏற்பட்டாலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் காலனியாதிக்க கால குற்றவியல் சட்டங்களை, நமது நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய தேவையை   அவர் எடுத்துரைத்தார். இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை அவர் எடுத்துரைத்தார்.

Tags: Justice through speedy trial is the right justice: Former Justice Nagamuthu
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சத்தீஸ்கர் முதலமைச்சர்!

Next Post

ஜெ.பி.நட்டாவை சந்தித்த தெலங்கானா முதல்வர்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies