கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகான இந்த காலகட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகே இதை அறிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு தனக்கு இன்னும் வலியும் வேதனையும் தருவதாகவும், ஆனால் இதுதான் அதற்கான சரியான நேரமென தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த 20 ஆண்டுகளாக ரசிகர்கள் கொடுத்த அன்புக்கும், தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக அணி வீரர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், மன அமைதியுடனும், பெருமையுடனும் தான் விலகுவதாகக் கூறியுள்ளார். தன்னை அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவராக படைத்த இறைவனுக்கு நன்றி என்றும் மெஸ்ஸி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.















