FQL செயலி மற்றும் VG TRADING நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறி, 100-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
FQL செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி, விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட பலரிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாகவும், தற்போது பணம் திரும்ப கிடைக்காமல் செயலிகள் முடங்கியுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புகார்களைப் பெற சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நகைகளை அடகு வைத்து முதலீடு செய்ததாகவும், தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.















