நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை கருத்தில்கொண்டு அந்நாட்டின் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சத்குரு பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனவும் அது மலைத் தொடர்களை உள்ளடக்கிய நாடுகளாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நேபாள பேரிடரில் உயிரிழந்தவர்களுக்காக கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ‘கால பைரவ கர்மா’ செய்யப்படும்” எனக் கூறினார்.















