நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின்போது நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் பணியாற்றிய 933 தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிவித்துள்ளது.
நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் காரணமாக, நேபாளத்தில் உள்ள பல்வேறு நீர்மின் திட்ட சுரங்கப்பாதைகளில் சிக்கிய 933 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த சுரங்கப்பாதைகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 254 முதல் 279 வரையிலான தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ‘அப்பர் திரிசூலி 3A’ மற்றும் ‘3B’ ஆகிய முக்கிய நீர்மின் திட்ட சுரங்கப்பாதைகளுக்குள் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது தொடர்பு துண்டிக்கப்பட்டதால் 933 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் தேடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் திறமை வாய்ந்த மலையேற்றக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.















