பணி ஓய்வை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, தனது நாற்பதாண்டுகால சேவைக்குப்பின் பணி ஓய்வு பெற்றார். தனது பிரியாவிடை நிகழ்வின் ஒரு பகுதியாக, சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரியின் நாற்பதாண்டு சேவைக்கு இந்திய ராணுவ தென்பகுதி தலைமையக அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், இதர நிலையினர், சிவில் பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராணுவ தென் பகுதியின் தளபதியாக இருந்தபோது லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பாதுகாப்புப் படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















