சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளரிடம் பேசியவர்,
”இன்று நான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து சத்தீஸ்கரில் நிலவரத்தை எடுத்துரைத்தேன்.
1975 ஜூன் 25 அன்று அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஜனநாயகத்தின் கொலை மற்றும் கருப்பு நாள்” எனத் தெரிவித்தார்.