கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது.
மேலும், பெண்கள் உள்பட ஏராளமானோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.\
ஏற்கெனவே கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனால் இந்த விவகாரம் விறுவிறுப்படைந்துள்ளது.