தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மதுபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
ஆலமன்குறிச்சியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மது போதையில் தகராறு செய்துள்ளார்.
அப்போது அமைதியாக இருக்கும்படி கூறியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேஷ்குமாரை குத்தியுள்ளார்.
இதனையடுத்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அதே கத்தியை பிடுங்கி குத்தியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக கணேஷ்குமார் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.