ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சாலையை கடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
இந்நிலையில் சாலையோர தடுப்புச் சுவரில் படுத்துக் கிடந்த சிறுத்தை ஒன்று வேகமாக சாலையை கடந்தது. இதனை வாகன ஓட்டிகள் தங்கள் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டனர்.