மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களின் வீட்டை சேதப்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.
நீடூர் ஆலங்குடியில் முன்விரோதம் காரணமாக ராம்குமார் என்ற இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கதிர், சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவர்களின் வீட்டை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். மேலும் உறவினர்களின் வீடுகளையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.