1. சென்னை தி. நகரில் உள்ள காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடியில் புதுப் பொலிவு பெற உள்ளது
2. இந்தியாவில் AI மற்றும் GenAI தொழில்நுட்பம் நாட்டின் நிலப்பரப்பை மறுவடிவமைக்கும் என்று சர்வதேச தரவுக் கழகம் கணிப்பு.
3. பான் கார்டில் பெயரில் பிழை இருந்தால் அதை 2 நிமிடங்களில் ஃபோனிலேயே மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்.
4. சென்னை நீரிழிவு டாக்டர் மோகனுக்கு அமெரிக்காவில் விருது – எமோரி பல்கலையின் விருது பெறும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. உலகிலேயே, தெற்கு ஸ்பெயினில் உள்ள ரோமானிய கல்லறையில் 2,000 ஆண்டுகள் பழமையான ஒயின் கண்டுபிடிப்பு.
6. திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 42,668 கோடி ரூபாய் நிதி, நெடுஞ்சாலைதுறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு.
7. திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
8. ராமேஸ்வரம் தீவில் சுற்றுலாவை ரூ.15.00 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த முடிவு – தமிழக அரசு தகவல்.
9. மத்திய அரசின் SSC, ரயில்வே, வங்கிப் பணிகளுக்கு 1,000 மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் 6 மாதம் உறைவிடப் பயிற்சி – தமிழ்நாடு அரசு.
10. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் முட்டைகள் விரைவாக கெட்டுப்போய் விடும் என தகவல்.
11.18-வது மக்களவையில் 74 பெண் எம்பிக்கள் உள்ளனர். இதில், மே.வங்கத்தில் இருந்து 11 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
12. அடுத்த 18 மாதங்களில் தமிழகத்தில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்.