போட்டித் தேர்வில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதற்கு வழிவகை செய்யும் அவசர சட்டம் உத்தர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், உத்தர பிரதேச மாநில அமைச்சரவை கூடி, போட்டித் தேர்வு விதிமுறைகளைத் கடுமையாக்கியுள்ளது.
அந்த வகையில் மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வில் வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டு முறைகேட்டில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிப்பதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி, சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துகள் முடக்கப்படுவதுடன், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கவும் அந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் ஜாமினில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.