மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க கூடுதல் வாகனங்களில் செல்ல அனுமதி கேட்டு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையிலான கட்சியினர், மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றும் முயற்சி நடைபெற்றதால் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளை கேட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையிலான கட்சியினர், 10 வாகனங்களில் செல்ல முயற்சித்தனர்.
ஆனால், வனத்துறையினர் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கினர். இதனால், மணிமுத்தாறு சோதனை சாவடியில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், 7 வாகனங்களில் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.