மகாராஷ்டிரா முதலமைச்சரை சந்தித்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம், அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். இதையடுத்து அவருடன் குழுப்புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.