விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து மின்கோபுரம் மீது ஏறி ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளரான ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து திருச்சி கண்டோண்மெண்ட் ஜல்லிக்கட்டு சாலையில் உள்ள மின் கோபுரத்தின் மீது ஏறி ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி மக்களவை தொகுதியில் தனது மனு ஏற்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டியில் மட்டும் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சுமார் 1 மணி நேரமாக போராட்டம் நடைபெறும் நிலையில் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.