கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரு தாலுக்காவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இதே போல கோவை மாவட்டம், க வால்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருவதால் தேவிகுளம் துணை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கியில் மண் சரிவு காரணமாக வீடு ஒன்று சேதமடைந்தது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.