விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பிரிட்டன் சிறையிலிருந்து நேற்று விடுதலையான அசாஞ்சே, இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஜூலியன் அசாஞ்சேவை நீதிமன்றம் விடுதலை செய்தது. எனவே விரைவில் அவர் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.