டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரபூர்வமாக கைது செய்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை சிபிஐயும் கையில் எடுத்த நிலையில், கெஜ்ரிவாலிடம் விசாரிக்க அனுமதி கோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு விடுமுறைகால அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். அதன்படி, அவரை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அதிகாரபூர்வமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். வழக்கு விசாரணையின்போது கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.