ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த காலம் மக்களவையின் பொற்காலம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்வான ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசிய பிரதமர், ஏற்கெனவே பல்ராம் ஜாகர் இரண்டு முறை மக்களவைத் தலைவராக செயல்பட்டதாக கூறினார்.
பொற்காலத்தில் மக்களவைத் தலைவராக மீண்டும் இருக்கையில் அமர்வது மிகப்பெரிய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
தங்களது அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகாலம் எம்.பி.க்களை முறையாக வழிநடத்துவீர்கள் என்றும் தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத பல திட்டங்களை, ஓம் பிர்லா தலைமையின்கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.