கனமழை காரணமாக கோவையில் உள்ள ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பதாக வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு வேலிகள் சேதமடைந்தது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிக்கு செல்ல தடை விதிப்பதாகவும், நீர்வரத்து குறைந்து தடுப்பு வேலிகள் சீரமைக்கப்பட்டவுடன் மீண்டும் அனுமதி வழங்க்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.