ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் டோடா அருகே கண்டோ பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். வெகுநேரமாக இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கை நீடித்தது.