டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவரது உடலில் சர்க்கரையின் அளவு குறைந்ததால், சோர்வாக காணப்பட்டார்.
உடனடியாக அவரை போலீஸார் தனியறைக்கு அழைத்துச் சென்று பிஸ்கெட் மற்றும் தேநீர் கொடுத்தனர்.
அதன்பின்னர், கெஜ்ரிவால் இயல்புநிலைக்குத் திரும்பினார்.