தனது மெய்க்காவலரால் தாக்கப்பட்ட ரசிகரை நேரில் சந்தித்து நடிகர் நாகார்ஜுனா வருத்தம் தெரிவித்தார்.
மும்பை விமான நிலையத்தில் நடிகர்கள் நாகார்ஜுனா, தனுஷ் ஆகியோர் சென்றபோது ரசிகர் ஒருவர் நாகார்ஜுனா அருகே வந்து புகைப்படம் எடுக்க முயன்றார்.
அவரை நாகார்ஜுனாவின் மெய்க்காவலர் தடுத்து நிறுத்தி, தாக்கினார். இதை நாகார்ஜுனா கவனிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி விமர்சனத்துக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், அந்த ரசிகரை நடிகர் நாகார்ஜுனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தனது மெய்க்காவலரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.