பாரீஸ் ஒலிம்பிக் போட்டியையொட்டி, 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அந்த அணியில், துணை கேப்டனாக ஹர்திக் சிங் இடம்பெற்றுள்ளார்.
பாரீஸில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் போட்டியில், இந்திய அணி தனது முதலாவதாக நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.