கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்கள் ஹிஜாப், புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது.
இது தங்களது மத உரிமையை மீறும் செயல் என்று கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.சந்துர்கர் மற்றும் ராஜேஷ் பாட்டீல் தலைமையிலான அமர்வு, கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.