ராமநாதபுரத்தில் நகராட்சி ஆணையாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி பாஜக கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் கார்மேகம் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே தான் நடத்திவரும் கடையை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர் குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் நகராட்சி ஆணையாளருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்.