பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!
Nov 11, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பூட்டான் நாடுகளுக்கு இடையே 4 ஆயிரத்து 33 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ‘கோழியின் கழுத்துக்கு’ அருகே அமையவிருக்கும் இந்தப்பாதையால் பல்வேறு பயன்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் போர்பந்தரையும் அசாமின் சில்சாரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 27, மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே மிகவும் குறுகி காணப்படும். வடக்கே நேபாளத்துக்கும் தெற்கே வங்கதேசத்துக்கும் இடையே உள்ள இந்த இடம் பார்ப்பதற்கு கோழியின் கழுத்தைப் போல் இருப்பதால் அந்தப் பெயரையே வைத்துவிட்டார்கள்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயாவை ஏழு சகோதரிகள் என்றழைப்பார்கள். அவற்றை இந்தியாவின் பிற இடங்களுடன் இணைப்பதில் தேசிய நெடுஞ்சாலை 27-க்கு பெரும் பங்குண்டு. 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்ட டோக்லாம் பகுதிக்கு அருகில்தான் இந்தப் பகுதி இருக்கிறது. இந்தியா – சீனா – பூட்டான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் இணையும் இடம் டோக்லாம் பீடபூமி. இது சிக்கிம் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் 2017-ஆம் ஆண்டு சீன ராணுவம் சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ராணுவத்தினர், அப்பணிகளைத் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கே போடப்பட்டிருந்த சாலையை அகற்றிய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினரையும் வெளியேற்றினர். இந்த விவகாரம் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியது. இப்படி உள்நாட்டிலும் புவிசார் அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோழியின் கழுத்துக்கு பக்கத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

2022-ஆம் ஆண்டு நேபாளத்துடன் ரயில் தொடர்பை ஏற்படுத்திய இந்தியா தற்போது அதை பூட்டானுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டுப் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் சென்றபோது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அசாம் மாநிலத்தின் KOKRAJHAR-க்கும் பூட்டானின் GELEPHU-வுக்கு இடையே 69 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் ரயில்பாதையும் மேற்குவங்கத்தின் BANARHAT – பூட்டானின் SAMSTE-வுக்கும் இடையே 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாவது ரயில்பாதையும் அமைக்கப்படவுள்ளன. முதல் திட்டம் 4 ஆண்டுகளிலும் இரண்டாவது திட்டம் 3 ஆண்டுகளிலும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 33 கோடி ரூபாய். KOKRAJHAR-ல் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவிலும் BANARHAT-ல் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் கோழியின் கழுத்துப் பகுதி உள்ளது. KOKRAJHAR-க்கும் GELEPHU-வுக்கு இடையிலான ரயில் பாதையில் 29 பெரிய பாலங்களும் 65 சிறிய பாலங்களும் இடம்பெறுகின்றன.

அதேபோல் BANARHAT-க்கும் SAMSTE-வுக்கும் இடையே ஒரு பெரிய பாலமும் 24 சிறிய பாலங்களும் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகமும் சுற்றுலாவும் மேம்படும்.

பூட்டானின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளி இந்தியாதான். பெரும்பாலும் ஏற்றுமதிக்கு இந்திய துறைமுகங்களையே பூட்டான் சார்ந்திருக்கிறது. எனவே பூட்டான் பொருளாதாரம் வளரவும் அந்நாட்டு மக்கள் பன்னாட்டுச் சந்தையை அணுகவும் புதிய ரயில்பாதைகள் உதவும். மற்றொருபுறம் வடகிழக்கு எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் இந்தத் திட்டம் பயன்படும்.

Tags: IndiaA twist in the geopolitics of the world: a railway line near the chicken's neck!இந்தியா - பூட்டான் நாடுகளுக்கு இடையே ரயில் பாதைputan
ShareTweetSendShare
Previous Post

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

Next Post

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

Related News

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கொத்து கொத்தாக கொலை செய்ய திட்டம் : வெள்ளை “கோட்” தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies