பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது உறுதி என பிரித்திவிராஜ் தொண்டமான் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தலைமை வகிக்கும் பிரித்திவிராஜ் தொண்டமானுக்கு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த பேத்துப்பாறை மலை கிராமத்தில், சொந்தமான பங்களா உள்ளது.
இங்கு வருகை தந்த அவருக்கு, மேளதாளம் முழங்க மலைக்கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.