வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!
Oct 10, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் கடந்தாண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பிரதமர் அலுவலகம் மற்றும் பொது சொத்துகள் சூறையாடப்பட்டன. போராட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கர வன்முறையில் சுமார் ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வங்கதேச அரசு கவிழ்ந்த நிலையில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டுத் தப்பியோடினார். தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதனிடையே அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களைச் சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் ஐ.ஜி ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாக வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்த தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீர்ப்பாயத்தை சுற்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: BangaladeshFormer Bangladesh Prime Minister Sheikh Hasina sentenced to deathபிரதமர் ஷேக் ஹசீனாஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

Next Post

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

Related News

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

Load More

அண்மைச் செய்திகள்

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies