நேட்டோ பொதுச்செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையொட்டி, நடைபெற்ற வாக்கெடுப்பில் மார்க் ரூட் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோமானிய அதிபர் கிளாஸ் லோஹன்னிஸ், கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவைத் திரும்ப பெற்றார்.
மார்க் ரூட்டின் நெதர்லாந்து பிரதமர் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. அவர் வரும் அக்டோபரில் நேட்டோ பொதுச் செயலாளராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.