சீர்காழியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, மாடு ஒன்று முட்டி தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சீர்காழியில் பெண் ஒருவர் சாலையை கடப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாடு ஒன்று அவரை முட்டித்தள்ளியது. அப்போது சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் கீழே விழுந்த பெண் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சாலையில் சுற்றி திரியும் கால்நடையின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.