டி20 உலகக்கோப்பைக்கான அரையிறுதி சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பரிக்கா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
தரவுபா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், தென் ஆப்பரிக்கா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 11.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.
57 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.