20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.