அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெறும் என கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலின் முதல் தள கட்டுமான பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் எனவும், கோயிலின் ஒட்டுமொத்த பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.